http://tulikapublishers.blogspot.com/2010/03/announcing-tulika-blogathon.html#idc-containerQuestion: How different are the written and spoken forms of your first language? If you want children to become familiar with their first language, which form would you look for in children's books - formal or informal? Why?
பதில்:
How different are the written and spoken forms of your first language? If you want children to become familiar with their first language, which form would you look for in children's books - formal or informal? Why?
பேச்சு தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. குழந்தைகளுக்கான நூல்கள் பேச்சு தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நம் செவியில் என்ன கேட்கிறதோ அதை வைத்து தான் நாம் மொழியை கற்று கொள்கிறோம்.
படிப்பு, எழுத்து பின் தொடரலாம். படிப்படியாக எழுத்து தமிழை அதிகப்படுத்தலாம்.
என் பிள்ளைக்கு இப்போது நான்கு வயசு. சற்று எழுத்து தமிழ் நூல்களை அவனுக்கு நான் படிக்க ஆரம்பித்திருக்கேன் - அவனுக்கு முக்காவாசி புரிகிறது. பேச்சு தமிழ் நூல்களை அவனே படிக்கிறான்.
தமிழ் என் தாய்மொழி. நான் கடந்த பத்து வருஷமாக அமெரிக்காவில் இருக்கிறேன். நான்கு வருஷம் முன் என்னுடைய முதல் குழந்தை பிறந்த பிறகு தான் மொழியைப்பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன். என் பிள்ளை என்னை "அம்மா" என்று தான் அழைக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். என்னுடைய கணவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். நாங்கள் வீட்டில் தமிழ் மட்டும் தான் என்று முடிவு செய்தோம். சில மாதங்கள் கழித்து தான் எங்களால் தூய தமிழில் பேச முடிஞ்சிது! மெட்ராஸ் தமிழ் ரொம்பவே மோசம்! இப்போது எங்கள் வீட்டில் மூன்று அகராதிகள் உள்ளன - எங்களுக்கு தெரியாத சொல்லை தேடி பார்க்க மிகவும் உதவியாக உள்ளது.
நம்முடைய கலாசாரத்தை நம்முடைய பிள்ளைகளுக்கு புரியவைக்க வேண்டும் என்றால் அதற்கு முதல் படி நம்முடைய தாய்மொழியே!
எனக்கும் என் கணவருக்கும் துலிகா நூல்களை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி. "உஷ்" என்ற நூலை என்னுடைய 18 மாச குழந்தை கூட விரும்பி படிக்கிறாள்! இன்னும் நிறைய நூல்களை வெளியிடுங்கள்.
Answer: Tamizh is my mother-tongue. There is a LOT of difference between the written and spoken form of this language. I feel that for children, books written in spoken Tamizh style are better suited. This is because, we learn a language first by hearing. Reading and writing follow. My son is now 4 years old and I read to him books that are slightly in formal Tamizh and he seems to understand most of it. Books that are in simpler, spoken Tamizh styles - he can read on his own!
I have been living in the USA for the past 10 years. Four years ago, when my first child was born, that is when I started wondering about my mother-tongue. I wanted my son to call me "Amma" - I was very clear about that! I was born and brought up in Madras (and it is always Madras for me, not Chennai!). My husband was born and brought up in Bengaluru (and he can speak fluent Tamizh, in addition to Kannada, Telugu and Hindi). We decided that at home, we'd speak ONLY Tamizh. It took us a few months to iron out all the non-Tamizh words and to speak in unadulterated Tamizh. Madras Tamizh is outstandingly bad as there are more English words than Tamizh ones! We have three dictionaries in our house now and these are very useful for us to look up words we do not know or are not familiar with.
If we have to pass on or teach our culture to our children, the foundation would be to expose them and teach them our mother-tongue. When my husband and I saw Tulika books for the first time, we were VERY happy! Even my 18 month old likes to "read" books like "Ush"!. Please continue the good work and publish lots of books for children!